பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் & சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் சூர்யா தேவி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியது!
இந்த படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், ரேஷ்மா முரளிதரன், ஜென்சன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ். விஜே பாரு, வினோதினி, சரத் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநரான பா.விஜய் கார்த்திக்கேயன் இந்தப் படத்தை இயக்குகிறார்
தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பாடல்களை விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர். படத் தொகுப்பு பணிகளை சக்தி திரு கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை ராம்போ விமல், ஆடை வடிவமைப்பு கவிதா, நடன அமைப்பை ராதிகா கையாள்கிறார்கள்.
அறிமுக இயக்குநரான பா.விஜய் கார்த்திக்கேயன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”1995-ல் அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக உள்ளது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க கூடியதாக இருக்க இப்படம் தயாராகிறது.
இதற்காக சிவகங்கை மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்துகிறோம் ” என்றார்.









