SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் “பீட்சா பாய்ஸ்” திரைப்படம் இன்று எளிமையான மற்றும் மகிழ்ச்சியான பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்தப் படத்தை ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தை சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். அவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார். கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடித்துள்ளனர்.
பீட்சா கடையில் வேலை செய்யும் ஐந்து இளைஞர்கள், ஒரு புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற முயற்சிப்பதுதான் கதையின் மையம்.
அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதைக் கடந்து வெற்றி பெறும் பயணம், காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் கலந்து சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது.
ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சரத் லோகித் அஷ்வா வில்லனாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவை குரு பிரசாத் செய்துள்ளார். R. L. ஜெகதீசன் முதன்மை இணை இயக்குநராக பணியாற்றுகிறார். படத் தொகுப்பை கணேஷ் குமார்.டி கவனிக்கிறார். கலை இயக்கத்தை கணேஷ் மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை வினோத் செய்துள்ளார். புரொடக்ஷன் டிசைனராக சதீஷ் பிரம்மாவர் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
பல இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையின்
கனவுகள் மற்றும் முயற்சிகளை பேசும் இந்த “பீட்சா பாய்ஸ்” படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.









