full screen background image

சத்யம் தியேட்டர் தாக்குதல்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீஸில் சரண்..!

சத்யம் தியேட்டர் தாக்குதல்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போலீஸில் சரண்..!

நேற்று நள்ளிரவில் சத்யம் மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு பொறுப்பேற்று தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 5 பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனராம்..

கோவை கு.ராமகிருட்டிணன்  தலைமையில் இயங்கும் தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் சேர்ந்த ஜெயபிரகாஷ், வாசுதேவன், ஜெயக்குமார், அப்பு மற்றும் கிருஷ்ணன் ஆகிய 5 பேர் தாங்கள்தான் இந்தச் செயலைச் செய்ததாக போலீஸில் கூறியிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் ‘கத்தி’ படத்தை திரையிடக் கூடாது என்று சில நாட்களுக்கு முன்பாக எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால் அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. இப்போது கத்தி படத்தின் தயாரிப்பாளர் கவனத்தில் வேல்முருகனும், திருமாவளவனும் மட்டுமே இருக்க.. திடீரென்று இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் களத்தில் குதித்திருப்பது நிச்சயம் அதிர்ச்சியானதுதான்..

கோவை பகுதியில் மிகுந்த செல்வாக்குள்ள இவர்கள் நாளை கத்தி படம் ரிலீஸானால் அங்கேயிருக்கும் திரையரங்குகளுக்கு என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்துவார்களோ தெரியாது..! இவர்கள்தான் என்பதை அறிந்தவுடனேயே இப்போது மாநில உளவுத்துறையும், காவல்துறையும் ஆட்சி மேலிடத்திற்கு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளனவாம்..!

கத்தியை அரிவாள்கள் சூழ்கின்றன..!  

Our Score