full screen background image

“கத்தி’ ரிலீஸ் உறுதி…”-அபிராமி ராமநாதன் தகவல்..!

“கத்தி’ ரிலீஸ் உறுதி…”-அபிராமி ராமநாதன் தகவல்..!

நேற்று இரவு சத்யம் மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகள் தாக்கப்பட்டதினால் இப்போதுவரையிலும் சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் ‘கத்தி’ படத்திற்கான முன் பதிவை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

இன்று காலை சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

அக்கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், “நாளை திட்டமிட்டப்படி ‘கத்தி’ திரைப்படம் வெளியாகும். தமிழக அரசு தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன் வந்துள்ளது. நாங்கள் கேட்காமலே அரசு தற்போது பாதுகாப்பு அளித்துள்ளது. இதனால் கத்தி படம் நிச்சயமாக நாளை ரிீலீஸாகும்…” என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனோ ‘கத்தி’ பட விஷயத்தில் அதன் தயாரிப்பாளர்களோடு தாங்கள் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

வேல்முருகனின் தலைமையில் இயங்கும் அனைத்து அமைப்புகளின் கூட்டம் இன்று மாலை அல்லது நாளை காலை நடைபெறவிருக்கிறதாம். அதில்தான் கத்தி படத்திற்கான எதிர்ப்பினை பற்றி உறுதியாக முடிவெடுக்க இருக்கிறார்களாம்..

காவல்துறையினர் இதில் தலையிட மறுத்ததற்கும், வேல்முருகனிடம் நேரடியாக பேச மறுத்ததற்கும் அரசியல் வட்டாரத்தில் வேறொரு காரணம் சொல்கிறார்கள்.

ஜெயலலிதா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியவுடன் விமான நிலையத்தில் தனது கட்சிக்காரர்களைக்கூட அழைக்காமல் வேல்முருகனை மட்டுமே தன் அருகில் அழைத்து நலம் விசாரித்தாராம். வேல்முருகன் மக்கள் முதல்வருடன் இந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும்போது நாங்கள் அவருடன் பிரச்சினை செய்ய விரும்பவில்லை என்று காவல்துறையின் மேலிடம் தயாரி்ப்பாளர்களிடம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டதாம்.

இதனால்தான் இன்னமும் வேல்முருகனை சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இன்னொரு பக்கம் இது அரசியல் இயக்கங்களிடையே ஈகோ பிராப்ளத்தையும் உண்டு செய்திருக்கிறது. யாருடைய எதிர்ப்பு லைகாவுக்கு எதிராக பலமாக பதியப்பட்டிருக்கிறது.. பதியப்படுகிறது என்பதில் சில இயக்கங்களுக்கிடையே இப்போது மோதல்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்போதுவரையிலும் அமைதியாக இருக்கிறது. நாளை களத்தில் குதிக்குமா? குதிக்காதா என்பதே சஸ்பென்ஸாக இருக்கிறது. இதில் முந்திக் கொண்டது பெட்ரோல் குண்டு வீசிய தொண்டர்களைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம்தான்.

இந்த வன்முறையை வேல்முருகனும் கண்டித்திருக்கும் அதே நேரத்தில், கத்தி படத்திற்கெதிரான போராட்டத்தை நாங்கள் இன்னமும் கைவிடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்..!

நாளை என்னதான் நடக்கும்..? ஒன்றும் புரியலவில்லை..!

Our Score