ONSKY Technology PVT LTD நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் தயாரிக்கும் திரைப்படம் ‘2030.’
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில், நடிகர் மஹத் ராகவேந்திரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போதைய நோய் தோற்று பொது முடக்கத்தையும் அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் மருத்துவத் துறையின் சதிகளையும் வெளிப்படுத்தும் கருவை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, ப்ளாஷ் பார்வேர்ட்(Flash forward) முறையில் இந்தப் படத்தில் கதை சொல்லப்பட இருக்கிறது.
இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் பேசும்போது, “திரைத்துறையில் எனது புதிய பயனத்தை துவக்கியபோது, இந்த துறையில் போராடும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டுமென்பதே, எனது முதல் குறிக்கோளாக இருந்தது.
திரைத்துறையில் புத்தம் புதிய சிந்தனைகளும், புதுமையான பார்வைகளும் எப்போதும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும். அந்த வகையில் ஒரு புதுமையான திரைக்கதையை தேடிக் கொண்டிருந்தபோது, இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்களின், முழுதாக முடிக்கப்பட்ட 2030 படத்தின் திரைக்கதை என் பார்வைக்கு வந்தது.
இத்திரைக்கதை எண்ணற்ற ஆச்சர்யங்களை கொண்டிருந்தது. தமிழுக்கு முற்றிலும் புதிதான ப்ளாஷ் பார்வேர்ட் ( Flash forward ) முறையில், கதை சொல்லும் வகையில், அதிலும் டைம் டிராவல் சம்பந்தப்படாமல் இந்த வகையில் கதை சொல்லும் முதல் படைபாக இருந்தது.
எல்லாவற்றையும்விட தற்போது உலகம் முழுவதையும் தாக்கியிருக்கும், பெருந்தொற்று காலத்தையும், பொது முடக்கத்தையும் வெளிப்படுத்தும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. இதன் கதை கார்ப்பரேட் மருத்துவத் துறையின் பின்னணியில் உள்ள சதிகளையும், அதனுடன் ஒரு பழி வாங்கலையும் முதன்மையாக கொண்டு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்கதை 2020-ல் துவங்கி 2030-ல் முடிவடையும். இந்த சுவாரஸ்யங்கள் அனைத்தையும் தாண்டி, ப்ளாஷ்பேக்கில் சிக்கிக் கொள்ளாத தனித்துவமான ஒரு திரைக்கதையாக எனக்கு பெரும் திருப்தியை இந்த திரைக்கதை அளித்துள்ளது.
நடிகர் மஹத் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படம் அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாற்றும். புதுமுக நடிகை ஸ்வாதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவர் ஒரு விளையாட்டு வீரர், தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர். மேலும் நடன கலைகளில் சிறந்து விளங்க கூடியவர். அவரது இந்த திறமைகள் அவரை ஒரு நட்சத்திர நாயகியாக முன்னிறுத்தும். இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி வருகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிதான அனுபவத்தை தரும்…” என்றார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், படம் உருவாகிவரும்விதத்தில், படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.











