Padmaja Films Private Ltd, Old Town Pictures ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஜீப்ரா’.
இந்தப் படத்தில் இளம் முன்னணி நடிகரான சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரமான தாலி தனஞ்சயா இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சத்யா அகல, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர்: ஈஸ்வர் கார்த்திக், கூடுதல் திரைக்கதை: யுவா, தயாரிப்பாளர்கள்: எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம், தயாரிப்பு நிறுவனம் : Padmaja Films Private Ltd மற்றும் Old Town Pictures, இணை தயாரிப்பாளர்: சுமன் பிரசார் பாகே ஒளிப்பதிவு : சுமன் பிரசார் பேகே, இசை: ரவி பஸ்ரூர், படத் தொகுப்பு : அனில் கிரிஷ், வசனம் : மீராக், சண்டை இயக்கம் : சுப்பு, ஆடை வடிவமைப்பு : அஸ்வினி முல்புரி, கங்காதர் பொம்மராஜு, பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார், சிவா(AIM).
இந்தப் படத்தின் தலைப்பான ‘ஜீப்ரா’ என்ற பெயரை குடியரசு தினமான இன்றைக்கு தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. தலைப்பு அறிவிப்பு போஸ்டரில் லோகோவுடன் ஒரு வேகமானி இணைக்கப்பட்டுள்ளது, அதில் நாம் செஸ் துண்டுகளைக் காணலாம்.
சதுரங்க ஆட்டத்தைப் போலவே படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். போஸ்டரில் உள்ள விஷயங்கள் முன்னணி கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனமான தன்மையைக் குறிக்கின்றன. போஸ்டரின் அத்தனை விசயங்களும் படைப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.