பிரபுதேவா-லட்சுமி மேனன் நடிக்கும் ‘எங் மங் சங்’ திரைப்படம் துவங்கியது..!

பிரபுதேவா-லட்சுமி மேனன் நடிக்கும் ‘எங் மங் சங்’ திரைப்படம் துவங்கியது..!

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் புதிய படம் ‘எங் மங் சங்.’

இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். ‘தேவி’ வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

தங்கர்பச்சான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் R.J.பாலாஜி, பாகுபலி பிரபாகர்(கலக்கேயா), சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், இசை – அம்ரீஷ், கலை – ராஜன்.D, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.பி.பாலகோபி, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்,  எழுத்து, இயக்கம் – எம்.எஸ்.அர்ஜுன்.

இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, காட்ரகட்ட பிரசாத், அருள்பதி, எல்.எம்.எம்.சுவாமிநாதன், கோபிநாத் ஒளிப்பதிவாளர், இயக்குநர் மணிகண்டன்,  கிருஷ்ணா ரெட்டி, அம்ரீஷ், கும்கி அஸ்வின், எஸ்.ஆர்.பிரபு, செய்யாறு ரவி, ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், நித்யானந்தம் இயக்குனர், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, பாடலாசிரியர்  விவேகா, கே.விஜயகுமார், கபார், கோகுல்நாத், சித்ரா லட்சுமணன், பிரமீட் நடராஜன், தளபதி, பாடலாசிரியர் சொற்கோ, இயக்குநர் மோகன்ராஜா, தனஞ்செயன், பிரமீட் சாமிநாதன், வெங்கட், ஜி.சிவா, ரோபோ சங்கர், டி.ஜி.தியாகராஜன், பாபு ஒளிப்பதிவாளர், கில்டு ராஜா, டாக்டர் சூரி, தயாரிப்பாளர் அழகர், ராதாகிருஷ்ணன், ஜோதி, இயக்குனர் சுந்தர்.சி,  விச்சு, கல்யான் இயக்குனர், தேனாண்டாள் முரளி, சிவசக்தி பாண்டியன், ஹச்.முரளி, பாண்டி ரவி, பஞ்சுசுப்பு, எ.எம்.ரத்னம், கே.ஆர்., கதிரேசன், கே.பாலு, சோழா பொன்னுரங்கம், ரவீந்தர், எஸ்.எ.சந்திரசேகர், வி.எ.துரை, கே.முருகன், கே.முரளிதரன், பி.டி.செல்வகுமார், ஆர்.வடிவேலு, பொன்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். 

விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் மற்றும் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன், தயாரிப்பு நிர்வாகி பாலகோபி ஆகியோர் வரவேற்றனர்.

[Not a valid template]

 

Our Score