full screen background image

“யாரோ’ திரைப்படம்தான் 2019-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம்”-சவால்விடுகிறார் இயக்குநர்..!

“யாரோ’ திரைப்படம்தான் 2019-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம்”-சவால்விடுகிறார் இயக்குநர்..!

பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக ‘யாரோ’ திரைப்படம் உருவாகி வருகிறதாம்.

வெங்கட் ரெட்டி மற்றும் சந்தீப் சாய் என்கிற இரண்டு மென் பொருள் வல்லுநர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி கூறும்போது, “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பகுதி. ஒரு திரைப்படத்தில் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் என்னதான் கஷ்டப்பட்டு தங்களுடைய பங்களிப்பை போட்டி போட்டுக் கொண்டு வழங்கினாலும், ஒட்டு மொத்தமாக படத்தின் கதை என்ன.. அதன் சுவாரஸ்யம் என்ன.. என்பது பற்றித்தான் வெளியில் அதிகம் பேசப்படும். 

சந்தீப் சாய் இந்த கதையை என்னிடம் சொல்லும்போது, நான் இந்த படத்தில் ஒருவனாக இருக்கப் போகிறேன் என்பதையும் மறந்து ஒரு திரைப்பட ரசிகனாக அந்தக் கதையை வெகுவாக ரசித்தேன்.

தயாரிப்பாளர் என்கிற முறையில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வதுபோல தோன்றலாம். ஆனால், படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதியிருக்கும் சந்தீப்பின் திறமைதான். கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியுள்ளது. இப்போது ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறேன்.

ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதால் எனக்குள் தற்போது பதட்டம் கூடியிருக்கிறது” என்றார்.

இயக்குநர் சந்தீப் சாய் இத்திரைப்படம் பற்றிக் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படம். ஒரு கொலையின் மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை இது.

இந்த ‘யாரோ’ திரைப்படம் ஒரு தனிமையான நாயகனைப் பற்றியது. நகரில் தொடர்ச்சியாக நடக்கும் சில கொலைச் சம்பவங்களில் நாயகனை சிக்க வைக்க சிலர் முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார்.

கொலைகாரனின் நாயகனைச் சுற்றியே வந்து கொண்டிருப்பதால் நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்க பெரும் போராட்டமே நடத்துகிறார். அந்தப் போராட்டம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு தனித்துவமான கதை சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் இதை நிச்சயம் விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.

இந்த ‘யாரோ’ திரைப்படம் நிச்சயமாக 2019-ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் என்று சவால்விட்டே சொல்கிறேன்..” என்றார்.

இயக்குநரின் உறுதியான நம்பிக்கைக்கு நமது வாழ்த்துகள்..!

Our Score