சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90-வது திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’..!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90-வது திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’..!

1990-ம்  ஆண்டு  ‘புது  வசந்தம்’  படத்தின்  மூலம்  தயாரிப்பு  துறையில்  கால்  பதித்தது  தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர்  குட் பிலிம்ஸ்’ நிறுவனம்.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் பல வெற்றிப்  படங்களை  தயாரித்ததுடன்  இன்று முன்னணியிலுள்ள  பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையுடையது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனம் தன்னுடைய  90-வது  படமாக  மிக  பிரம்மாண்டமான  செலவில் தயாரிக்கும் திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’.

இந்தப் படத்தில் ஆர்.பி.செளத்ரியின் மகனும், நடிகருமான  ஜீவாவும், அருள்நிதியும் இணைந்து நாயகர்களாக நடிக்கின்றனர். முதன்முறையாக  இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.  கதாநாயகிகளாக மஞ்சிமா  மோகன்,  பிரியா  பவனி  சங்கர் இருவரும் நடிக்கிறார்கள்.

காரைக்குடி செட்டியாராக ‘அப்பச்சி’ என்ற வித்தியாசமான ஒரு வேடத்தில் நடிகர் ராதாரவி நடிக்கிறார். மற்றும் 'ரோபோ' சங்கர், பால சரவணன் இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இளவரசு, 'ஆடுகளம்' நரேன், வேல.ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, 'பூலோகம்' ராஜேஷ், பெனிடோ ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிசாசு படத்தின் நாயகியான பிரக்யா மார்ட்டினும் ஒரு கெளரவ வேடத்தில் நடிக்கிறார்.

தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ், கதை, திரைக்கதை, இயக்கம் - N.ராஜசேகர், வசனம் - ஆர்.அசோக், இசை - யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் - பா.விஜய், விவேகா, ஒளிப்பதிவு  - அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு - தினேஷ் பொன்ராஜ், கலை இயக்கம் - M.முருகன், நடன இயக்கம் - ராஜு சுந்தரம், சண்டை இயக்கம் –பிரதீப்.  இவர்  பிரபல  ஸ்டண்ட்  மாஸ்டர் ‘தளபதி’ தினேஷின் மகன் ஆவார். நிர்வாகத்  தயாரிப்பு - ஸ்ரீநாத் ராஜா மணி, தயாரிப்பு மேற்பார்வை - புதுக்கோட்டை  M.நாகு, R.ரமேஷ், மக்கள் தொடர்பு - ரியாஸ் கே.அஹ்மத்.

இந்தக் ‘களத்தில்  சந்திப்போம்’ திரைப்படம்  இரண்டு  நண்பர்களுக்குள்  உள்ள நட்பை மையமாக வைத்து  எடுக்கப்பட்ட  அதிரடி  ஆக்சன்  கமர்சியல் படமாக உருவாகியுள்ளது.  நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி  என  அனைத்து  அம்சங்களும் நிறைந்த  ஜனரஞ்சக படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, காரைக்குடி போன்ற இடங்களில் நடந்துள்ளது.