full screen background image

“கே.பி. ஒரு வியாசர். நான் அவரது மாணவர்..” – எழுத்தாளர் கோவி.மணிசேகரன் புகழாரம்..!

“கே.பி. ஒரு வியாசர். நான் அவரது மாணவர்..” – எழுத்தாளர் கோவி.மணிசேகரன் புகழாரம்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவு குறித்து அவரது சீடரும், எழுத்தாளருமான கோவி.மணிசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி இது :

நான் இலக்கிய உலகில் வளர்ந்த பிறகு, திரையுலகில் யாரை குருவாக ஏற்பது என்று யோசித்தபோது, என் கண்ணில் கே.பாலசந்தர்தான் தெரிந்தார்.

விஜயதசமியன்று நேரில் சென்று அவர் காலில் விழுந்து அவரிடம் சிஷ்யனாக சேர்ந்தேன். ‘அரங்கேற்றம்’ முதல் ‘அவள் ஒரு தொடர்கதை’வரை அவரிடம் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளேன்.

சினிமா உலகில் அவர் ஒரு வியாசர். நாங்கள் அவரது சீடர்கள், அதில் நான் ஒரு கூழாங்கல்.. அந்த மகானை இழந்ததற்கு, இந்த திரையுலகிற்கு மட்டும் அல்ல, அவரது மாணவர் உலகமும், நானும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்.

Our Score