full screen background image

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’!

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’!

நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  

இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும், இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் சண்டைக் காட்சிகளை S.R. ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.

பாடல்களுக்கு யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல் வரிகளை எழுதுகின்றனர். ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன், அந்தோணி தாசன், ஸ்வேதா அசோக் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ் ஜார்ஜ் அமைத்துள்ளார். வி. மாணிக்கவாசகம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ்.எம்.சேகர் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

காதல், இளமை மற்றும் ரசனையான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஹலோ மிஸ்’, ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

Produced by N. Kumarlal Nehru under the banner of Namaha Movie Makers, the upcoming film is titled ‘Hello Miss’. The film is directed by Sairaa, who also plays the lead role. Bismi makes her debut as the heroine with this film.

The film features an ensemble cast including K.S. Ravikumar, Kalyani Natrajan, Gajaraja, Janaki Suresh, G. Gnana Sambandhan, Senthil Kumari, Bhuvaneswari, Bala Hassan, Dinesh, KPY Sarath, Swaminathan, Sathyan, Birla Bose, Citizen Mani and Maran in important roles.

S.R. Hari Murugan has choreographed the stunt sequences, while Brinda and Dinesh are the choreographers.

The songs have been penned by renowned lyricists Yugabharathi, Vivek, Thamarai and Viveka. The songs are rendered by Haricharan, Swetha Mohan, Prince George, Sathya Prakash, Kapil Kapilan, Anthony Dasan and Swetha Ashok.

R.B.Gurudev is the Director of Photography, Prince George has composed the music, V. Manikkavasagam works as the Executive Producer, and S.M. Sekar works as the Production Executive.

The film has been shot across Chennai, Trichy and Puducherry.

Blending love, youthful emotions and feel-good elements, ‘Hello Miss’ is being crafted as an entertaining and refreshing experience for audiences.

The First Look Poster of ‘Hello Miss’ has now been released and is receiving a positive response from fans.

Our Score