“நயன்தாராவுடன் திருமணம் எப்போது..?” – விக்னேஷ் சிவன் ரசிகருக்கு சொன்ன பதில்..!

“நயன்தாராவுடன் திருமணம் எப்போது..?” – விக்னேஷ் சிவன் ரசிகருக்கு சொன்ன பதில்..!

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக காதலித்து வரும் ஜோடிகள் நயன்தாரா-விக்னேஷ் சிவன். காதலர்களாகவே ஒன்றாக.. ஒரே வீட்டில் இருந்துவரும் அவர்கள் எப்போதுதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு திரைத்துறையையும் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமையன்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அதேபோல் நேற்றைக்கு ஒரு ரசிகர் அவரிடம், “நீங்கள் ஏன் இன்னமும் நயன்தாரா மேடத்தைத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்..? நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்..” என்று கேட்டிருந்தார்.

அதற்கு விக்னேஷ் சிவன் பதில் அளிக்கையில், “கல்யாணத்துக்கு நிறைய செலவாகும். அதுக்காகத்தான் இப்போ காசு சேர்த்துக்கிட்டிருக்கோம். அதோட இந்தக் கொரோனாவும் முடியணும். அதுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்…” என்று பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

ஆக, கொரோனா முடிந்தவுடன் இந்தக் காதலர்களின் திருமணம் நடக்கும் போலிருக்கிறது..!

 
Our Score