கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்து வரும் நடிகை அமலா பால் பற்றிய முதல் செய்தி தற்போது வந்துள்ளது.
‘ஆடை’ படம்தான் அமலா பால் கடைசியாக நடித்து வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மேலும் ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடு ஜீவிதம்’, ‘கடாவர்’ உள்ளிட்ட படங்களிலும் அமலா பால் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார்.
‘யூ டர்ன்’(U Turn) கன்னட படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநரான பவன் குமார் இயக்கியிருக்கும் ‘குடி யெடமைதே’(Kudi yedamaithe) என்ற வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் அமலா பால் நடித்திருக்கிறார். அமலா பாலுக்கு ஜோடியாக ராகுல் விஜய் நடித்துள்ளார்.
இத்தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாயிருக்கிறது. இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ, ஹீரோயின் கதாப்பாத்திரங்களை கொண்ட கதையல்ல. ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் இடையில் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது.
8 பகுதிகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் தொடர், ஆஹா(aha) ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வெப் சீரிஸின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.