நல்லா இருந்த ஊரில் தம்பி ராமையா செய்த கலகம்..!

நல்லா இருந்த ஊரில் தம்பி ராமையா செய்த கலகம்..!

ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’.

இதில் அறிமுக நாயகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க அருந்ததி நாயர் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் தம்பி ராமையா, ஆடுகளம் ராமதாஸ், யோகி பாபு, ரோபா சங்கர், மனோபாலா, டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, பாவேந்தன், சோனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – S.K.மிச்சல்,  இசை – R. தேவராஜன், படத்தொகுப்பு – லெனின் – மாருதி கிருஷ், வசனம் – J.R. ரூபன், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – பாரதி, தயாரிப்பு – லெக்ஷ்மி டாக்கிஸ். ‘ப்ரியமுடன்’, ‘யூத்’, ‘வாட்டாகுடி இரணியன்’, ‘ஜித்தன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். 

பல ஆண்டுகளாக இரு ஊர்களுக்கு இடையே இருந்த மிகப் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும் சமயத்தில் அந்த ஊருக்குள் வரும் கன்னிச் சாமி தம்பி ராமையா ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்க ஊரே ரணகளமாகிறது. நாரதரின் கலகம் நன்மையில் முடிவது போல், கடைசியில் பிரச்சனை நன்மையில் முடிகிறது.

Our Score