வங்காள மொழி ‘வின்சிடா’ திரைப்படத்தை தமிழுக்குக் கொண்டு வருகிறார் தனஞ்செயன்

வங்காள மொழி ‘வின்சிடா’ திரைப்படத்தை தமிழுக்குக் கொண்டு வருகிறார் தனஞ்செயன்

வங்காள மொழியில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ‘வின்சி டா’. இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இரண்டு ஹீரோக்கள் கதை கொண்ட திகில், சஸ்பென்ஸ் பாணியில் உருவான இந்தப் படம் வங்காள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது இந்தப் படத்தைத் தமிழுக்குக் கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். வழக்கமாக வங்காள மொழி படங்களை தமிழில் யாரும் ரீமேக் செய்வதில்லை. அந்த வழக்கத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் உடைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழுக்கு ஏற்றாற்போல் வடிவைக்க இயக்குநர் ராம் அழைக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து தனஞ்செயனும் திரைக்கதை எழுதுகிறாராம்.

படத்தை இயக்கப் போகும் இயக்குநர், நட்சத்திரங்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.