full screen background image

“சிம்புவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..” – ஹன்சிகாவின் பாராட்டு..!

“சிம்புவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..” – ஹன்சிகாவின் பாராட்டு..!

நடிகர் சிம்புவுக்கு தான் நாயகியாக நடித்திருக்கும் ‘மஹா’ படத்தில் நடித்துக் கொடுத்தமைக்காக அவருடைய முன்னாள் காதலியான.. நடிகை ஹன்சிகா மோத்வானி பாராட்டுக்களை அள்ளி வீசியிருக்கிறார்.

சிம்புவும், ஹன்சிகாவும் 2015-ம் ஆண்டில் ‘வாலு’ படத்தில் நடித்தபோது காதல்வயப்பட்டார்கள். சிம்புவின் வழமையான காதல்போல் இதுவும் மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. இருவருமே ‘நாங்கள் தற்போது சிங்கிள்ஸ்தான்’ என்று சொல்லிவிட்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் நட்பைத் தொடர்ந்தார்கள்.

இந்த நிலையில் ஹன்ஸிகா தனது 50-வது படமான ‘மஹா’ படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிப்பதற்கு சிம்புவை அழைத்தார். ஹன்சிகாவுக்காக அதனை ஏற்றுக் கொண்ட சிம்புவும் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

“மஹா’ படத்தில் சிம்பு நடித்திருக்கும் காட்சிகளெல்லாம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது…” என்று இப்போது புகழ்ந்து தள்ளுகிறார் ஹன்சிகா.

இது பற்றி அவர் பேசும்போது, “எங்களுடைய மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்தக் கொரோனா காலத்திலும் பல தடைகளை தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், பங்கு கொண்ட படக் குழுவினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுதாக கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக் குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம்.

இப்படத்தில் ஒரு பாத்திரமாக பங்கு கொள்ள ஒப்புக் கொண்ட நடிகர் சிம்புவிற்கு பெரும் நன்றி. படத்தில் அவர் வரும் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கொண்டாடுவார்கள்…” என்றார்.

Our Score