விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இது விக்ரம் நடிக்கும் 53-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை மூவிங் பிரேம் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தமன்னா விக்ரமுடன் நடிப்பது இதுவே முதல் முறையாகும். மற்றும் சூரி, ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சுகுமார், இசை – எஸ்.எஸ்.தமன், கலை – மாயாபாண்டி, சண்டை பயிற்சி – ரவிவர்மன், படத் தொகுப்பு – ரூபன், எழுத்து, இயக்கம் – விஜய்சந்தர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை மீனம்பாக்கம் பின்னி மில்லில் துவங்குகிறது. அதற்காக மிகப் பிரம்மாண்டமான செலவில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டத்தில் இந்தப் படம் தயாராகிறது.









