விஜய் ஆண்டனி-ஆத்மிகா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்

விஜய் ஆண்டனி-ஆத்மிகா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த ‘கந்தக் கோட்டை’, ‘வல்லக் கோட்டை’ ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு அந்த நிறுவனம் மூன்றாவதாகத் தயாரித்துள்ள  ‘ராஜ வம்சம்’  திரைப்படம் மிக விரைவில்  வெளியாக இருக்கிறது.

இப்போது இத்திரைப்படம் வெளியாகவதற்குள்ளாக அடுத்தப் படத்திற்கும் பூஜை போடப்பட்டுள்ளது.

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரிப்பில் உருவாகும் இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார்.

இசை – ஜோகன், ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமது, எழுத்து, இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்.

‘மெட்ரோ’ பட புகழ்  இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் .

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

Our Score