“களம்’ படத்தின் முன்னோட்டம் என்னை நடுங்க வைத்துவிட்டது” – இயக்குநர் வெங்கட் பிரபுவின் அனுபவம் 

“களம்’ படத்தின் முன்னோட்டம் என்னை நடுங்க வைத்துவிட்டது” – இயக்குநர் வெங்கட் பிரபுவின் அனுபவம் 

தமிழ் சினிமாவிற்கு மேலும் திகிலூட்டக் கூடிய வகையில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'களம்'.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது, "தற்போதுதான்  இந்தப் படத்தின் முன்னோட்டத்தை நான் பார்த்தேன். திகில் சினிமாவிற்குரிய அனைத்து அம்சங்களும், இதில் அமைந்திருக்கிறது..." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "பொதுவாக ஓர் திகில் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல; பார்வையாளர்களை பயத்தில் வைத்திருப்பதே அதனுடைய சிறப்பம்சம். அந்த வகையில், ‘களம்’ படத்தின் முன்னோட்டம் என்னை சில இடங்களில் ஆட வைத்துவிட்டது.

அறிமுக இயக்குநரான ராபர்ட் S.ராஜ் மற்றும் கதாசிரியர் சுபிஷ்.K.சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.." என்றார்.

இந்த ஏப்ரல் மாதத்தில், இந்த  திகில் அனுபவத்தை தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம்.