‘சென்னை 28′, ‘மங்காத்தா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு.
தற்போது டி.ஆர்.சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ படத்தினை இயக்கி வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இத்திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கும் 10-வது திரைப்படமாகும்.
இந்தப் புதிய படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
Our Score