full screen background image

நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இரு மொழிப் படம்..!

நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இரு மொழிப் படம்..!

இயக்குநர் வெங்கட் பிரபு,  நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் இயக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை Srinivasaa Silver Screens நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்குநராக அவதாரம் எடுத்து தற்போது 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாக சைதன்யா உடன் அவர் இணையும் இரு மொழி படத்தின் அறிவிப்போடு அவர் வந்திருக்கிறார்.

நாக சைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, ‘Thank you’ என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், அவர் அடுத்ததாக இயக்குநர்  வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22-வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரம்மாண்டமான செலவில் உருவாக உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 11-வது படமாகும். தெலுங்கில் அவருக்கு முதல் படம்.

பெயரிடப்படாத இந்த புதிய படம் நாக சைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும், இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். இப்படம் பெரிய பட்ஜெட்டில், சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவின்  திறமைக்கு தகுந்தபடியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார்.

பிரபலமான நடிகர், பிளாக்பஸ்டர் இயக்குனர் மற்றும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம் என்று மூன்று தரப்பினரும் இணைந்து, இரு மொழி ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு சிறந்த அனுபவத்தை தரவுள்ளனர்.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Our Score