full screen background image

வேந்தர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்..!

வேந்தர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்..!

தித்திக்கும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது வேந்தர் தொலைக்காட்சி.

15, வியாழன், 2015

காலை 7.30 மணி – புத்தம் புது காலை – நடிகை ஓவியா, தன்னுடைய பொங்கல் அனுபவங்களைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி. மேலும், தன்னுடைய திரை அனுபவங்கள் பற்றியும் ஓவியா பகிர்ந்து கொள்கிறார்.

காலை 9 மணி – பட்டிமன்றம் – நாஞ்சில் சம்பத் தலைமையில் முன்னணிப் பேச்சாளர்கள் பங்கு பெறும் ‘மாற வேண்டியதும் மாற்ற வேண்டியதும் எது? பழமையா? புதுமையா?’ சிறப்பு பட்டிமன்றம்.

VIKRAM1

பகல் 12 மணி – ‘ஐ’ சிறப்பு பார்வை – பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்திருக்கும் ‘ஐ’ படத்தின் நாயகன் விக்ரமின் நேர்காணல்.

பகல் 12.30 மணி – ‘ஜில் ஜங் ஜக்’ – சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் கலகலப்பான கலாட்டா நிகழ்ச்சி.

பிற்பகல் 2 மணி – புலிப்பார்வை – வேந்தர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான ‘புலிப்பார்வை’ திரைப்படம்.

மாலை 6 மணி – நாட்டுப்புறப் பொங்கல் – பின்னணிப் பாடகர் வேல்முருகன், நாட்டுப்புறக் கலைஞர்களோடு ஆடிப்பாடி கொண்டாடும் நிகழ்ச்சி.

இரவு 8 மணி – வேந்தர் வீட்டு பொங்கல் – சினிமா பிரபலங்கள், தங்கள் மனைவிகளோடு பங்கு பெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி.

 16, வெள்ளி, 2015

VIMAL

காலை 7.30 மணி –  புத்தம் புது காலை – நடிகர் விமல், தன்னுடைய பொங்கல் மற்றும் திரை அனுபவங்கள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.

காலை 10 மணி – பி பார் ப்ரோ – பிரபல நட்சத்திரங்கள், கடற்கரையில் பொங்கல் கொண்டாடும் கலாட்டா நிகழ்ச்சி.

பிற்பகல் 2 மணி – பவர் பொங்கல் – கல்லூரி மாணவர்களுடன் இணைந்து பவர் ஸ்டார் சீனிவாசன் கொண்டாடும் காமெடி கதகளி.

பிற்பகல் 2.30 மணிஸ்டார் ஹாலிடே – நடிகர் விதார்த், கிராமத்து மக்களோடு இணைந்து ஆடல், பாடல், விளையாட்டு என அசத்தும் நிகழ்ச்சி.

மாலை 6.30 மணி 7-ம் உயிர் : ஒரு முன்னோட்டம் – வேந்தர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் திகில் நெடுந்தொடர். 7-ம் உயிர் நட்சத்திரங்களோடு, படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டம்.

இரவு 8 மணிஇது நம்ம ஊர் திருவிழா – பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகியவற்றை மண்ணின் மைந்தர்கள் வழங்கும் நிகழ்ச்சி.

நம் மண்ணின் திருவிழாவை, வேந்தர் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுங்கள்.

Our Score