நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் தெரிகிறது.
சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹி்டடான படம் ‘பெங்களூர் டேய்ஸ்’. அஞ்சலி மேனன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மலையாளத்தின் டாப் மோஸ்ட் இளைய ஹீரோ, ஹீரோயின்களான துல்கர் சல்மான், நிவின் பாலி, பகத் பாசில், நித்யா மேனன், நஸ்ரியா நஸீம், பார்வதி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதே படத்தை இப்போது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் மொழி மாற்றம் செய்கிறார்கள். பி.வி.பி. சினிமா நிறுவனமும், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
இதில் துல்கர் சல்மான் வேடத்தில் ஆர்யாவும், பார்வதி மேனன் வேடத்தில் நித்யா மேனனும், பகத் பாசில்-நஸ்ரியா ஜோடி நடித்த வேடத்தில் சித்தார்த்-சமந்தா ஜோடியும் நடிக்கவுள்ளனர். நிவின் பாலி நடித்த வேடத்தில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளாராம். மலையாளத்தில் நித்யா மேனன் நடித்த வேடத்திற்கு மட்டுமே ஆள் தேடும் படலம் நடக்கிறதாம்.
இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் பாஸ்கர் இயக்குகிறாராம்.