‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்

‘வட்டகரா’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் K.பாரதி கண்ணன்

இயக்கநர் K.பாரதிகண்ணன் அந்தமானில் பல குறும் படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றவர். இப்போது தயாரிப்பாளர்கள் சதீஸ் மற்றும் கார்த்திக் ராஜ் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘வட்டகரா’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் நாயகர்களாக ‘அங்காடி தெரு’ மகேஷ், சதீஷ், சரனேஷ் குமார், மற்றும் கண்ணன் மாதவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் தாஜ் நூரின் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஹாலிவுட் படம் அளவிற்கு காட்சிகளும், அதற்கான வண்ணங்களும் இருக்குமாறு பிரம்மாண்டத்தைக் கொடுத்துள்ளார்.

படத் தொகுப்பாளர் அமர்நாத் திரைக்கதைக்கு ஏற்ப கதையினை ஹாலிவுட் அளவிற்கு கனகச்சிதமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள SFX M.J.ராஜீ இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.

படத்திற்கான பாடல் வரிகளை கபிலன், சினேகன், இளைய கம்பன், நிமேஸ் போன்றோர் எழுதியுள்ளனர். கபிலன் அவர்களின் பாடல் வரிகள் இன்றைய சூழ்நிலை குறித்த தத்துவப் பாடலாகவும், சினேகன் தனது அப்பாவை மனதில் கொண்டு மிகவும் உணர்வுப்பூர்வமான பாடல் எழுதியுள்ளார். அப்பாவிற்கான இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்று படக் குழு நம்புகிறது. மற்றொரு காதல் வரிகளை இளைய கம்பன் எழுதியுள்ளார். இதுவரை இல்லாத நிலையில் வித்தியாசமான பேச்சில் தன் அரும்புக் காதலை வெளிப்படுத்தும் பாடல் ஒன்றை நிமேஸ் கொடுத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் கே.பாரதி கண்ணன் பேசும்போது, “இக்கதையை தயாரிப்பாளர் சதீஸ் அவர்களிடம் சொன்ன பொழுது, அவருக்கு கதையின் மேல் கொண்ட ஈர்ப்பால் படப்பிடிப்பிற்கான அடுத்தக் கட்ட வேலைகளை பார்க்க ஆரம்பித்ததுடன், நான்கு நாயகர்களில் தானும் ஒரு நாயகராக நடிக்க சம்மதம் தெரிவித்தார். இது என் மீது அவர் கொண்ட நம்பிக்கையை அதிகப்படுத்தி விட்டது என்று சொல்லலாம்.

வித்தியாசமான படங்கள் கொடுப்பவரின் மனதில், எங்கள் படம் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இது எங்களின் வெற்றிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்தது.

இந்தப் படத்தின் கதை நாயகர்கள் நான்கு பேரை சுற்றியே நடப்பதால் அவர்கள் நால்வருமே தங்களுக்கான நடிப்புத் திறனை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

IMG-20190615-WA0032

படத்தின் First look போஸ்டரை வெளியிட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை அனுகினோம், இந்த படத்தின் வித்தியாசமான தலைப்பும் அதற்கான போஸ்டரும் என்னை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் இந்த படத்தினை திரையில் காண்பதற்கான ஆவலும் கொண்டுள்ளதாக POSTER வெளியீட்டின்போது கார்த்திக் சுப்புராஜ் கூறியதும், பாராட்டியதும் எங்களுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்தது.

ஒரு வித்தியாசமான கதைக் களத்துடன் விரைவில் உங்கள் அனைவரையும் திரையில்  சந்திக்கின்றோம். தற்போது படத்தின் அடுத்தக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது…” என்கிறார்  இயக்குநர் K.பாரதி கண்ணன்.

Our Score