full screen background image

“வரலட்சுமி ஸ்கிரீனில் வந்தாலே போதும்; ரசிகர்களைக் கவர்ந்து விடுவார்” – பிரபுதேவாவின் பாராட்டு..!

“வரலட்சுமி ஸ்கிரீனில் வந்தாலே போதும்; ரசிகர்களைக் கவர்ந்து விடுவார்” – பிரபுதேவாவின் பாராட்டு..!

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பொய்க்கால் குதிரை’.

பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன், ‘ஹரஹர மகாதேவகி’,  இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் பிரபுதேவா பேசுகையில், “இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், ‘ஜூன் போனால் ஜூலை..’ எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன்.

இந்தப் படத்தில் எனக்கிருந்த ஒரேயொரு கஷ்டம் ஒற்றைக் காலுடன் நடனமாட வேண்டியதிருந்ததுதான். சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னைவிட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதங்களுக்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

படத்தில் ஒற்றைக் காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோதும் எந்த சிரமமும் இல்லை. சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.

நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும்கூட. சிலர் திரையில் நடிக்கும்போதுதான் அவரது திறமை வெளிப்படும். ஆனால், வரலட்சுமி திரையில் தோன்றினாலே போதும்; ரசிகர்களை கவர்ந்து விடுவார்…” என்றார்.

Our Score