full screen background image

‘வந்தா மல’ திரைப்படத்தில் ‘பராசக்தி’ படத்தின் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது

‘வந்தா மல’ திரைப்படத்தில் ‘பராசக்தி’ படத்தின் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது

1952-ம் ஆண்டு ஏவி.எம். நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பராசக்தி திரைப்படம் இன்றைக்கும் தமிழ்ச் சினிமாவின் தலையாய படமாகவே திகழ்கிறது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்திற்கு பெயர் பெற்ற படமாகவும் விளங்குகிறது.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி’ என்ற பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார்.

இப்போது இந்தப் பாடலை ‘வந்தா மல’ என்கிற புதிய திரைப்படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளார்களாம். இதன் ஆடியோ உரிமையை வைத்துள்ள சரிமக நிறுவனத்திடமிருந்து முறைப்படி உரிமம் பெற்று இந்தப் பாடலை படத்தில் பயன்படு்ததியிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

VANDHA MALA

Our Score