full screen background image

விஜய் ஆண்டனி-சத்யராஜ்-பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம்

விஜய் ஆண்டனி-சத்யராஜ்-பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம்

நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரித்துள்ள படம் வள்ளி மயில்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா மூவரும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு சூப்பர் ஹிட் படமான ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) இந்தப் படத்தில் கதையின் நாயகியாக வள்ளி மயில்’ என்ற முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்றும் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

தயாரிப்பு – தாய் சரவணன், எழுத்து, இயக்கம் – சுசீந்திரன், இசை – D.இமான், ஒளிப்பதிவு – விஜய் k. சக்கரவர்த்தி, படத்தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – K.உதய குமார், பாடல்கள் – யுகபாரதி, நடனம் – ஷோபி, சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன் சிவா, உடைகள் வடிவமைப்பு – ராதிகா சிவா, பத்திரிகை தொடர்பு – ஜான்சன், விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான், இணை தயாரிப்பு : கார்த்திக்.

1980 கால கட்டங்களில் நடக்கும் கதையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மே 16 அன்று திண்டுக்கல்லில் தொடங்கி கொடைக்கானல், தேனி, காரைக்குடி, கோபிசெட்டிபாளையம், பழநி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

Our Score