full screen background image

‘யசோதா’ படத்தில் அசர வைக்கும் சமந்தாவின் நடிப்பு..!

‘யசோதா’ படத்தில் அசர வைக்கும் சமந்தாவின் நடிப்பு..!

Sridevi Movies என்ற தயாரிப்பு நிறுவனம் சமந்தா நாயகியாக நடிக்கும் ‘யசோதா’ படத்தை தங்களின் 14-வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.

இப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

இசை – மணிசர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr.சல்லா பாக்யலட்சுமி, பாடல்கள் – ராமஜோகையா சாஸ்திரி, கிரியேட்டிவ் இயக்குநர் – ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் – அசோக், சண்டை பயிற்சி இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், லைன் புரொடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர் – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி – ஹரிஷ், தயாரிப்பாளர் – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்,
பேனர் – Sridevi Movies.

இன்றைக்கு இந்தப் படத்தின் முதல் காட்சித் துணுக்கு வெளியாகி பரபரப்பானது. அந்தக் காட்சித் துணுக்கில் யசோதா கண் விழிக்கிறாள்.  இதுவரையிலான அவளது உலகம்  இனி இல்லை. அவளது சூழல், அவளது உடை, அவளது காலம் மற்றும் பேரமைதி அனைத்தும் ஆச்சர்யாமாக முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது.

அவளது இதயத் துடிப்பின் சத்தம் அவள் காதை கிழிக்கும் நேரத்தில் அவள் ஜன்னல் கதவை திறக்கிறாள். அங்கு ஒரு புறா அவள் வேண்டும் சுதந்திரத்தை சுவாசிக்கிறது. அவள் அதை பிடிக்க நினைக்கிறாள்.. அதற்கு மேல் என்ன நடந்தது என்கிற ஆர்வத்தைத் தூண்டும்வகையில் இந்த முதல் பார்வையில் காட்சி அமைந்துள்ளது.  

இந்த காட்சித் துணுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், “படத்தில் இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. சமந்தா, ‘பேமிலி மேன்-2’ வெப்சீரிஸ் மூலம் பான்-இந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவரது வளர்ச்சியை மனதில் வைத்து, இந்த படத்தை சமரசமின்றி உருவாக்குகியுள்ளோம்.

சமந்தா தனது பாத்திரத்தை வெளிப்படுத்தியவிதம், அவரது அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று. அவரது நடிப்பைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். சண்டை பயிற்சியாளர் வெங்கட் மேற்பார்வையில் கிளைமாக்ஸ் பகுதியை கொடைக்கானலில் படமாக்கினோம்.

ஏற்கனவே 80% படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜூன் 1-வது வாரம்வரை படப்பிடிப்பு நடைபெறும்.

ஸ்பெஷல் எஃபெக்ட்களும் இந்தப் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எங்களின் இயக்குநர் ஹரி-ஹரிஷின் பணி பிரமிக்க வைக்கிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

Our Score