‘பசங்க’, ‘கோலிசோடா’ வரிசையில் வெற்ற பெற காத்திருக்கும் ‘வஜ்ரம்’ திரைப்படம்..!

‘பசங்க’, ‘கோலிசோடா’ வரிசையில் வெற்ற பெற காத்திருக்கும் ‘வஜ்ரம்’ திரைப்படம்..!

‘வஜ்ரம்’ திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது. 

இந்தப் படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரித்திருக்கிறார்.  இந்தப் படத்தில் ‘பசங்க’, ‘கோலிசோடா’  வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக பவானி ரெட்டி  என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  

மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா, ஜெய், பாண்டிரவி, பெல் பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி, சமிரா, அம்சாதேவி,  நாகு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவு    –  A.R. குமரேசன்

இசை    –     F.S.பைசல்

பாடல்கள்      –  சினேகன்

வசனம்     –  லோகிதாஸ்

எடிட்டிங்     –    மாரீஸ்

ஸ்டண்ட்   – ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர்

கலை    –   மகேஷ்.N.M    

நடனம்   –   விஜய், ராஜ்விமல்

நிர்வாக ஆலோசகர்    –   G.S.செந்தில் ஜெயன்

தயாரிப்பு நிர்வாகம்   –  சிவசங்கர்

தயாரிப்பு    –   P.ராமு

கதை, திரைக்கதை, இயக்கம்  –  S.D.ரமேஷ்செல்வன்

படம் பற்றி இயக்குனர் ரமேஷ்செல்வன் கூறும்போது,   “இந்தப் படம் முழுக்க முழுக்க கல்வியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. கல்விதான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும், ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியும்.  அடுத்த தலைமுறைகள் சிறப்பாக அமைய வேண்டுமானால் அதற்க்கு கல்வி மிகவும் அவசியம். அப்படிப்பட்ட கல்விக்காக போராடும் நான்கு சிறுவர்களின் கதைதான் இது.

மனிதனுக்கும் கல்வி அவசியம் என்ற கொள்கையோடு தன் வாழ்நாளை அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் அர்ப்பணித்து, அனாதைகளாய் கிடந்த நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தத்தெடுத்து அவர்களோடு ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பிராமையா.

எதிர்களால் அப்பள்ளி அபகரிக்கப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து எப்படி எதிரியிடம் போராடி தம்பி ராமையாவையும், பள்ளியையும் மீட்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.  

அச்சன்கோவில், மூணாறு, சாலக்குடி, அஸ்ஸாம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.  படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ளது…” என்றார்.

Our Score