full screen background image

தனுஷ், எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் கலக்கும் ‘வை ராஜா வை’..!

தனுஷ், எஸ்.ஜே.சூர்யா கெஸ்ட் ரோலில் கலக்கும் ‘வை ராஜா வை’..!

பட்டையை கிளப்ப தயாராகிவிட்டது ஐஸ்வர்யா ஆர்.தனுஷின்  ‘வை ராஜா வை’

தரமான படங்களை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து சரியான நேரத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் சிறந்த நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம்  அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்.

இவர்கள் தற்போது ஐஸ்வர்யா ஆர்.தனுஷின் நுட்பமான இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வை ராஜா வை’ என்ற படத்தை மிகுந்த பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

Vai Raja Vai Working Stills (1)

இப்படத்தில் இளைய நவரசத் திலகம் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ‘அழகிய தமிழ் மகள்’ பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர், டேனியல் பாலாஜி வில்லன் கதாபத்திரத்திலும், விவேக் மாறுபட்ட  ஒரு கதாபத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சதீஷ், மனோபாலா, M.S.பாஸ்கர்,  மயில்சாமி  மற்றும் பலரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

பிரபல இயக்குநரான வசந்த் சாய் இப்படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக வசந்த் நடித்திருக்கிறார்.  டாப்சி மிக சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார். மேலும் ஒரு சண்டை கட்சியிலும் நடித்திருக்கிறாராம்.

இன்னொரு திருப்பமாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார் என்பது சுவையான செய்தி.

இதில் கொக்கி குமாராக வரும் தனுஷின் சிறப்பு தோற்றம் அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் அமைக்கபட்டிருக்கிறது. அதனால்  படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

இயக்குநர் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் இயக்கிய முதல் படம் ‘3’.  தனது கணவர் தனுஷை வைத்து அழுத்தமான காதல் கதையில் bipolar disorder என்ற மன நோயின் தாக்கத்தையும், அதன் பாதிப்பையும் உணர்த்தும் வகையில் இயக்கியிருந்தார்.

அதில் வரும் “why this kolaveridi”  பாடல் உலகம் முழுவதும் அனைவரையும் வசிகரித்து இன்றுவரைஅசை போட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே.  மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே அவர் தனது இரண்டாவது படைப்பான ‘வை ராஜா வை’ என்ற இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

முதல் படத்தில் அனிருத்துடன் பணியாற்றிய ஐஸ்வர்யா, இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில்  intuition எனற special power-ஐ மையமாக வைத்து காதல்,  காமெடி,  திரில்லர் என அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் ஒரு கமர்ஸியல் எண்ட்டர்டெயினராக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா.

சமிபத்தில்  வெளியான   இப்படத்தின் முன்னோட்டத்தை கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதேபோல் இரண்டாவது டிரைலரை 2 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கி படக் குழுவினரையும் இயக்குநர் ஐஸ்வர்யாவையும் பாராட்டியுள்ளனர். தணிக்கை குழுவினரின் பாராட்டை தனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறார் இயக்குநர்.

ருலேட் என்ற கேம் தமிழ் சினிமாவிற்கு புதுசு.  இந்த விளையாட்டை அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக கதை சொல்லும் விதத்திலும் காட்சிப்படுத்திய விதத்திலும் திறம்பட படமாக்கியுள்ளனர்.

பிரமாண்டமான ராயல் கரோபியன் கப்பலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு,  சிங்கப்பூருக்கு சென்று அந்தக் கப்பலில் பாங்காக் மற்றும் வியட்நாம் வழியாக சென்றபடியே படப்பிடிப்பை  நடத்தியுள்ளார்கள். 

அந்த பிரம்மாண்டமான கப்பலில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் படம் பார்ப்பவரின் கண்களுக்கு விருந்தாக அமையும்வகையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ‘பச்சை வண்ண பூவே’ பாடல் காட்சிக்காக ஜப்பான் சென்று அந்த ரம்மியமான சூழலை பாடலுக்கு பாடலுக்கு தகுந்தார்போல்  படம் பிடித்துள்ளனர். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்தின் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இளமை துள்ளலுடன் படமாக்கப்பட்டிருக்கிறது..!

பொதுவாக ஒரு படத்தின் எதிர்பார்ப்பு,  ரசிகர்கள் படம் பார்க்க டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் எண்ணிக்கையை வைத்துக் கணிப்பார்கள். ஆனால் ‘வை ராஜா வை’ படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிட முன் பதிவு செய்ய ஆர்வம் காட்டிய விதம் படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதிலும், வெளியிடுவதிலும் சிறந்த தயாரிப்பு நிறுவனமான கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம், ‘வை ராஜா வை’ படத்தை தமிழக்மெங்கும் வெளியிடுகிறது. இவர்கள் சமீபத்தில் வெளியீட்ட  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த  ‘ஒ காதல் கண்மணி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமெங்கும் ‘வா ராஜா வா’ என்று ரசிகர்களை அழைக்க, வரும் மே 1-ல் வெளியாகிறது ‘வை ராஜா வை’. 

Our Score