full screen background image

தனுஷ்-சம்யுக்தா மேனன் ஜோடியாக நடிக்கும் ‘வாத்தி’ படம் துவங்கியது

தனுஷ்-சம்யுக்தா மேனன் ஜோடியாக நடிக்கும் ‘வாத்தி’ படம் துவங்கியது

தனுஷ் நடிக்கும் புதிய படமான ‘வாத்தி’, ஹைதராபாத்தில் இன்று காலை பூஜையுடன் துவங்கியது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாறன்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்துக்குப் பிறகு தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார்.

இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. 

சூர்யதேவரா நாக வம்சியின்  சித்தாரா  என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யாவுடன் (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் நர்ரா ஸ்ரீனிவாஸ்  பலர் நடிக்கிறார்கள்.

எழுத்து & இயக்கம் – வெங்கி அட்லூரி, தயாரிப்பு நிறுவனம் – சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ்  & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், தயாரிப்பாளர்கள் – நாக வம்சி.S – சாய் சௌஜன்யா, நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.வெங்கடரத்தினம், தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா, படத் தொகுப்பு – நவின் நூலி, ஒளிப்பதிவாளர் – தினேஷ் கிருஷ்ணன், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், மக்கள் தொடர்பு – லக்ஷ்மி வேணுகோபால்,  ரியாஸ் கே.அஹ்மத்.

இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான வெங்கட் அட்லூரி இயக்குகிறார்.

ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் இன்று காலை 10.19 மணிக்கு படத்தின் பூஜை நடைபெற்றது.  

படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் K.L.நாராயணா, M.L.குமார் சௌத்ரி, S.ராதாகிருஷ்ணா, சுரேஷ் சுக்கப்பள்ளி, நர்ரா ஸ்ரீனிவாஸ் மற்றும் மகேந்திரா(MD, பிரகதி பிரிண்டர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர் .

திரைக்கதையை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸின் எஸ்.ராதாகிருஷ்ணா குழுவினரிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் கிளாப்பை இயக்குநர் திரி விக்ரம் அடிக்க, சுரேஷ் சுக்கப்பள்ளி கேமராவை இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

Our Score