‘நட்டி’ நடராஜ்-ராம்கி நடிக்கும் புதிய படம் அந்தமானில் துவங்கியது

‘நட்டி’ நடராஜ்-ராம்கி நடிக்கும் புதிய படம் அந்தமானில் துவங்கியது

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாய் சரவணன் தயாரிக்கும் புதிய படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார். மேலும், முன்னணி கதாநாயகிகளில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மற்றும் இந்தப் படத்தில் மனோபாலா, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ், சஞ்சனா சிங், அஸ்மிதா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஓளிப்பதிவு – தேவராஜ், இசை – சத்திய தேவ், வசனம் – கீர்த்தி வாசன், பாடல்கள் – மக கவி, வெள்ளத்துரை, படத் தொகுப்பு – பாசில், நடன இயக்கம் – ராதிகா, கலை இயக்கம் – தாகூர், புகைப்படங்கள் – மதன், மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு மேற்பார்வை – பி.அவினாஷ், தயாரிப்பு – சாய் சரவணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.பி.தனசேகர்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமானில் படமாக்கப்பட உள்ளது. இதற்காகப் படக் குழுவினர் தற்போது அந்தமானில் முகாமிட்டுள்ளனர். அந்தமானில் ஊட்டியை அடுத்துள்ள கூடலூர், தேவாலா, பந்தலூர் போன்ற பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Our Score