நடிகர் கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ படத்தின் டீஸர் நேற்று நள்ளிரவில் திடீரென்று யுடியூபில் வெளியாகியுள்ளது. சில நூறு பார்வையாளர்கள் பார்த்து முடிப்பதற்குள் அது நீக்கப்பட்டுவிட்டது.
நேற்று மாலை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். அவர் வருவதற்கு முன்பேயே ‘அஞ்சான்’ படத்தின் டீஸர் அந்த விழாவில் வெளியிடப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. அதுபோல இதுவும் வெளியிடப்பட்டதா என்று அந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கேட்டபோது ‘இல்லை’ என்றார்கள். பின்பு எப்படி திடீரென்று டீஸர் வெளியானது என்று விசாரித்தால் பதில் கிடைக்கவில்லை..!
அந்த டீஸரை பார்த்த இணையத்தளவாசிகள் பலரும் அது இப்போதும் டிவிக்களில் ஒளிபரப்பாகிவரும் ‘நிஜாம் பாக்கு’ விளம்பரம் போல இருப்பதாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் பார்த்தவகையில் ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் எப்படி இருக்குமோ.. பல முக்கிய நடிகர்கள் பங்கேற்கும் திரைப்படத்தின் முன்னோட்டம் எப்படியிருக்க வேண்டுமோ அதை தப்பாமல் செய்திருப்பதாகவே தோன்றுகிறது..!