சிவக்குமார் கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா..!

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா..!

நடிகர் சிவக்குமார் தன்னுடைய நூறாவது படமான 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படம் வெளியான பின்பு, தனது பெயரில் கல்வி அறக்கட்டளையைத் துவக்கினார். வருடாவருடம் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் 25 மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை வழங்குவதாக அறிவித்தார்.

அன்று முதல் கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். இந்தாண்டு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நேற்று உமாபதி அரங்கத்தில் நடைபெற்றது. 25 மாணவ, மாணவியர்க்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம், மொத்தம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் திண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி நடத்தும் தாய்த் தமிழ் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாயும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் வாழை என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பிற்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடையையும் வழங்கினார்கள்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, நடிகர் சிவக்குமார் மற்றும் சிவக்குமாரின் மகள் பிருந்தாவும் கலந்து கொண்டனர்.