அக்சரா ஹாசனின் பாட்டியாக உஷா உதூப் நடிக்கிறார்..!

அக்சரா ஹாசனின் பாட்டியாக உஷா உதூப் நடிக்கிறார்..!

Trend Loud நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, அந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

தற்போது அடுத்த ஆச்சரியமாக, இந்தியாவின் பெரும் புகழ் பெற்ற பாடகியான உஷா உதுப்... அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி பேசும்போது, "இத்தருணம் மிகப் பெரும் பெருமை தரக் கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாகும்.

கடைசியாக அவர் நமது உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும் ஒரு சிறப்பு.

இப்படத்தில் கர்னாடக சங்கீத வித்தகராக, அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக உஷா உதூப் மேடம் நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது. ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார்.

அவர் மிகவும் பிரபலமான பாடகி.. மிகச் சிறந்த நடிகர் என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் அளவுக்கு அன்பானவர்.. அவரது துறுதுறுப்பு படக் குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது. அவர் முற்றிலும் இயக்குநரின் நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி..." என்றார்.