full screen background image

‘உறுமீன்’ படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சர்டிபிகேட்..!

‘உறுமீன்’ படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சர்டிபிகேட்..!

பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் ‘உறுமீன்’ படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஹீரோயினாக பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான ரேஷ்மி நடித்திருக்கிறார். மற்றும் மனோபாலா, அப்புக்குட்டி, காளி வெங்கட், சான்ட்ரா எமி, லுக்மேன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன் நடித்திருக்கிறார், சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

விறுவிறுப்பான ஆக்சன், திரில்லர் படமாம். கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன..? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன..? இதுதான் இந்தப் படத்தின் கதைக் கருவாம்..

இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. இதனால் வரிவிலக்கு கிடைக்க முடியாமல் போய்விட்டது என்றாலும், படத்திற்கு அவசியம் கருதி சில காட்சிகளை நீக்க முடியாது என்று சொல்லி சர்டிபிகேட்டை வாங்கிக் கொண்டார்களாம்..! 

தைரியமாகத்தான் வருகிறார்கள்..!

Our Score