full screen background image

‘உப்பு கருவாடு’ படத்தை Auraa சினிமாஸ் வெளியிடுகிறது..!

‘உப்பு கருவாடு’ படத்தை Auraa சினிமாஸ் வெளியிடுகிறது..!

இயக்குநர் ராதாமோகனின் படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பு உண்டு. விரைவில் வெளி வர உள்ள  ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு அதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. 

ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரித்து இருக்கும்  இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடித்துள்ளனர்.

தமிழ் திரை உலகில் தரமான படங்களை வாங்கி வெளியிடுவோர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுள்ள Auraa சினிமாஸ்  நிறுவனத்தினர் ‘உப்பு கருவாடு’ படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.

Auraa சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் இதைப் பற்றி கூறுகையில்  “எங்களது நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தரமான படங்களை ரசிகர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதுதான்.

அந்த வகையில் ‘உப்பு கருவாடு’ எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். எனக்கு இயக்குனர் ராதாமோகன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்பொழுது அவர் இயக்கிய ‘உப்பு கருவாடு’ படத்தை வாங்கி வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். 

எல்லா தரப்பு ரசிகர்களும் குடும்பத்தோடு சென்று பார்க்க கூடிய இந்த ஜனரஞ்சகமான படத்தின் இசை வெளியீட்டு  விழா, வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி நடக்கவுள்ளது. படம் வெளியாகும்  நாள் விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார்.

Our Score