இன்று 2015 அக்டோபர் 9, வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும், 2 தெலுங்கு டப்பிங் படங்களும், 1 மலையாள டப்பிங் படமும் ரிலீஸாகியிருக்கிறது.
1. மசாலா படம்
இந்தப் படத்தை All In Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா இருவரும் ஹீரோக்களாக நடித்திருக்கின்றனர். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா நடித்து உள்ளார். இசை – கார்த்திக் ஆச்சாரியா. பிரபல ஒளிப்பதிவாளர் லஷ்மண் குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். Auraa சினிமாஸ் விநியோகஸ்தரான மகேஷ் வெளியிடுகிறார்,
2. கத்துக்குட்டி
நிலா சாட்சி கிரியேஷன்ஸ் சார்பில் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே, ஜெயராஜ், சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சந்தோஷ் ஸ்ரீராம், இசை – அருள் தேவ், பாடல்கள் – சினேகன். புதுமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கியுள்ளார்.
3. சதுரன்
குபேரன் சினிமாஸ்’ என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் குபேரன் பொன்னுசாமி தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘மூடர் கூடம்’ ராஜாஜி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை வர்ஷா மலேத்ரியா நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ராஜூ ஈஸ்வரன், ‘கயல்’ புகழ் தேவராஜ், கௌதம் கிருஷ்ணா, பாவா லட்சுமணன், எலிசபெத் சூரஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஜி.மோனிக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டங் – சுரேஷ் அர்ஸ். ‘ஆம்பள’, ‘என்னமோ நடக்குது’, ‘டார்லிங் 2’ படங்களுக்கு வசனம் எழுதிய G.ராதாகிருஷ்ணன் இந்தப் படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். ஏ.கே.ரிஷால் சாய் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, முத்தமிழ் மற்றும் ரிஷால் சாய் ஆகியோர் எழுதியுள்ளனர். தினா, நந்தா இருவரும் நடனம் அமைத்துள்ளனர். கே.கணேஷ்குமார் சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். பழனிவேல் கலை இயக்கம் செய்துள்ளார். ராஜீவ் பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
4. அந்தாதி
டேவட்ராப் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இதில் அஞ்சனா கீர்த்தி, அர்ஜூன் விஜயராகவன் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும், நிழல்கள் ரவி, சத்யா, ஜகன்னாதன், கார்த்திக் நாகராஜன், பார்கவ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமந்த் இசையமைத்துள்ளார். ரமேஷ் வெங்கட்ராம் இயக்கியுள்ளார்.
கண்கள் இரண்டால் – மலையாள டப்பிங் படம்
மலையாளத்தில் ‘மிஸ்ஸஸ் லேக்கா தரூர்’ என்ற பெயரில் வெளியான படமே ‘கண்கள் இரண்டால்’ என்ற பெயரில் தமிழுக்கு வருகிறது. D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்D.வெங்கடேஷ் தயாரித்திருத்திருக்கிறார்.
இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். கதாநாயகனாக அலெக்ஸ் நடித்திருக்கிறார். மற்றும் வேணி, முத்துலஷ்மி, மகேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்திரமௌலி, இசை – ரமேஷ் நாராயணன், எடிட்டிங் – நாகிரெட்டி, வசனம் – நந்து, பாடல்கள் – சி.புண்ணியா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஷாஜியம்.
மந்த்ரா-2 – தெலுங்கு – டப்பிங் படம்
இந்த படத்தை SSS பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.சுந்தரம் தயாரிக்கிறார். கதாநாயகனாக ‘கருங்காலி’ படத்தில் நடித்த சீனிவாஸ் நடிக்கிறார். நாயகியாக சார்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தணிகலபரணி நடிக்கிறார். அமுல் வசனத்தை எழுதுகிறார். இசை – சுனில் காஷ்யப், ஒளிப்பதிவு – ராஜேந்திரா, ஸ்டண்ட் – ரன் ஜாஸ்வா, நடனம் – பிரேம்ரஜித், திரைக்கதை, இயக்கம் – S.V.சதீஷ், தயாரிப்பு – எஸ்.சுந்தரம்.
காக்கி சட்டை காஞ்சனா – தெலுங்கு டப்பிங் படம்
மித்து மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜெயராமன் தயாரிக்கும் படம், ‘காக்கிசட்டை காஞ்சனா’. இந்தப் படத்தில் ஆயிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
வசனம் – பாலு, பாடல்கள் – செங்கதிர்வாணன், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.ஆறுமுகம், தயாரிப்பு – கே.ஜெயராமன், இயக்கம் – பி.ஆனந்தம்ராஜூ.