full screen background image

கெளரி கிஷன் நாயகியாக நடிக்கும் ‘உலகம்மை’ திரைப்படம்

கெளரி கிஷன் நாயகியாக நடிக்கும் ‘உலகம்மை’ திரைப்படம்

S.V.M. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படம் ‘உலகம்மை’.

இந்தப் படத்தில் 96’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – V.மகேஷ்வரன் (SVM புரொடக்‌ஷ்ன்ஸ்), இசை – இசைஞானி இளையராஜா, கதை (நாவல்) – சு.சமுத்திரம், ஒளிப்பதிவு – K.V.மணி, வசனம் – குபேந்திரன், திரைக்கதை – சரவணன், கலை – வீரசிங்கம், படத் தொகுப்பு – ஜான் ஆப்ரஹாம், உடைகள் – ஜெயபாலன், ஒப்பனை – பாரதி, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

காதல் FM’, ‘குச்சி ஐஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான விஜய் பிரகாஷ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

1970-ம் ஆண்டில் தமிழகத்தில் சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடந்த உண்மைக் கதைதான் இந்த உலகம்மை’ திரைப்படம்.

பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ஒரு நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 
Our Score