தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. கேரளாவிலும் ‘கத்தி’ திரைப்படம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் விஜய்யின் அனைத்து படங்களுமே வசூலை குவித்திருக்கின்றன. மலையாள நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கு மட்டுமே கேரளாவில் ரசிகர்கள் உண்டு.
இதனால்தான் ‘ஜில்லா’ படம் கேரளாவில் மட்டும் நன்றாகவே ஓடியதாகச் சொல்கிறார்கள்.. மோகன்லால் அப்பா கேரக்டராகவே இருந்தாலும் நடிக்க முன் வந்ததற்கும் அதுதான் காரணம்..!
இப்போது ‘கத்தி’ படமும் கேரளாவில் 110 தியேட்டர்களில் ரிலீஸாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.. எப்போதும் விஜய்யின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்யும் தமீம் என்பவர்தான் இந்த ‘கத்தி’ படத்தையும் விலைக்கு வாங்கியுள்ளார்.
அதோடு தமிழ்நாட்டில்கூட செய்யாத ஒரு விளம்பரச் செயலை கேரளாவில் செய்திருக்கிறார்கள். ஒரு டிரெயினையே வாடகைக்கு எடுத்து அதில் கத்தி படத்திற்கு புதுமையாக விளம்பரம் செய்திருக்கிறார்களாம்.. ஆச்சரியப்படுகிறார்கள் தமிழகத்து விநியோகஸ்தர்கள்..!
படம் ரிலீஸாகும் இரு வாரங்கள்வரையிலும் அந்த டிரெயினில் இந்த கத்தி படத்தின் விளம்பர வாசகங்கள் இருக்குமாம்.. எத்தனை லட்சங்கள் செலவோ..?