full screen background image

“ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன்…” – மது அருந்துவது பற்றி நடிகை காஜல் அகர்வாலின் கமெண்ட்..!

“ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன்…” – மது அருந்துவது பற்றி நடிகை காஜல் அகர்வாலின் கமெண்ட்..!

தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவும் காஜல் அகர்வாலும் நடித்து சமீபத்தில் ரிலீசான ‘கோவிந்துரு அந்தாரிவாதலே’ என்ற தெலுங்கு படம் அதிக சர்ச்சையை எழுப்பியது.

படத்தில் அதிகமான கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் சென்சார் போர்டில் இந்தப் படம் நிறைய ‘கட்’டுகளை பெற்றிருந்தது.

Kajal-agarwal-Govindudu-andarivadele-movie

இந்தப் படத்தில் காஜல் அகர்வால் மிக, மிக அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். மேலும் இதே படத்தில் காஜல், மது அருந்துவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது.

இந்தப் படம் பற்றியும் அந்த மது அருந்தும் காட்சி பற்றியும் சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார் காஜல்.

அதில், “அந்தாரிவாதுலே’ படத்தின் டைரக்டர் என்னிடம் கதை சொன்னபோது படத்தில் நான் மது குடிப்பது போன்ற காட்சி ஒன்று உள்ளது என்று சொன்னார். கேட்டவுடன் எனக்கு தயக்கமாக இருந்தது.

பிறகு அவரே என்னிடம், “இப்போதெல்லாம் நிறைய பெண்கள் ‘பப்’களுக்கு அடிக்கடி செல்கிறார்கள்.. குடிக்கிறார்கள்.. இது இப்போது சகஜம்தானே..” என்று சமாதானப்படுத்தினார். அதனால் நானும் அந்தக் காட்சியில் நடித்தேன்.

பெண்கள் மது குடிப்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் மது அருந்தியது இல்லை. ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எது சரி, எது தப்பு என்பதை சொல்லித்தான் எனது பெற்றோர்கள் என்னை வளர்த்துள்ளனர்.

kajal-with-wine

நண்பர்களுடன் ‘பப்’களுக்கு போகும்போது பழரசம் ஆர்டர் பண்ணி அருந்துவேன். பெண்கள் ஆனாலும் சரி, ஆண்கள் ஆனாலும் சரி, மது அருந்துவது கெட்ட பழக்கம். இதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.  சினிமாவில் இது போன்ற காட்சிகள் வைக்கப்படுவது ஒரு ஜாலிக்காகத்தான். அதை வாழ்க்கையில் யாரும் பின்பற்றக் கூடாது…” என்று சொல்லியிருக்கிறார் காஜல் அகர்வால்.

ஏற்கெனவே ‘மாற்றான்’ படத்திலேயே காஜல் மது அருந்துவது போல நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

Our Score