இன்று 2015 மே-8-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்களும், 1 ஆங்கில டப்பிங் படமும் ரிலிஸாகியுள்ளன.
1. இந்தியா பாகிஸ்தான்
இத்திரைப்படத்தை பாத்திமா விஜய் ஆண்ட்டனி தயாரித்திருக்கிறார். விஜய் ஆண்ட்டனி, சுஷ்மா சேகர், பசுபதி, ஜெகன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஓம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீனா தேவராஜன் இசையமைத்திருக்கிறார். தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். எழுதி, இயக்கியிருக்கிறார் என்.ஆனந்த்.
2. எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்
வனிதா பிலிம் புரொடெக்சன் மற்றும் பி விஷன், பானு பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இதில் ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மேலும் வனிதா, சந்திரிகா, ஐஸ்வர்யா, நிரோஷா, கணேஷ், பாண்டு, ரவிகாந்த் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பை செய்துள்ளார். Sri இசையமைக்க சண்டை பயிற்சியை ஜாக்குவார் தங்கம் செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனத்தை வனிதா எழுத, ராபர்ட் இயக்கியிருக்கிறார்.
3. காதல் இலவசம்
கணேஷ் பி, ஜெஸ்மிதா இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். எம்.சீலன் இசையமைத்திருக்கிறார். சரவணன், விஜயன் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வசந்த் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கிறார்.
4. நீயும் நானும் நிலவும் வானும்
காளியம்மன் பிலிம்ஸ் சார்பில் வி.எம்.பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். புதுமுகங்களான தனிஷ், மடால்சா நடிப்பில் Trinadha rao nakino இயக்கியிருக்கிறார். சேகர் சந்திரா ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் இசையமைத்திருக்கிறார்.
ஜூராஸிக் அவதார் – ஆங்கில டப்பிங் படம்