இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015

இன்று 2015 நவம்பர் 6 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்களும் 1 வெளிநாட்டு தமிழ்ப் படமும் ரிலீஸாகியுள்ளன.

1. இனிய உளவாக

iniya ulavaga-poster-1

பத்ரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பாக நா.ஜெயபாலனும், Sun Bright Cine Creations சார்பாக வி.சி.ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கல்கி ஹீரோவாகவும், ஆதிராம்மின்னு ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – நெளஷத், இசை – ஜீவன் மயில், எடிட்டிங் – ஷேக் முகமது – எழுத்து, இயக்கம் – பால சீனிவாசன்

2. கிரிங் கிரிங்

kiring kiring-poster-1

இந்தப் படத்தின் நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் கதாநாயகியாக காவ்யா நடித்துள்ளார். ஒளிப்பதிவு – துவாரகேஷ், இசை – ஜூடு, படத் தொகுப்பு – சிவ தர்மா. ஆர்.பி.எம். சினிமாஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராகுல்.

உயிர்வரை இனித்தாய்  (டென்மார்க் தமிழ்ப் படம்)

uyiervarai inithaal-poster-1  

டென்மார்க் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலரும் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள தமிழ்ப் படம் இது. இதில் வஸந்த் செல்லத்துரை ஹீரோவாகவும், நார்வினி டேரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் தயாநிதி, குணபாலன் ஆகியோரும் நடித்துள்ளனர். டெசூபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வசந்த் இசையமைத்துள்ளார். கே.எஸ்.துரை இயக்கியுள்ளார்.

Our Score