இன்று டிசம்பர் 5, 2014 வெள்ளிக்கிழமையன்று 8 நேரடி தமிழ்ப் படங்களும், 3 டப்பிங் படங்களும் ரிலீஸாகியுள்ளன.
1. ர
இந்தப் படத்தில் அஷ்ரப், அதிதி செங்கப்பா, லாரன்ஸ், ஜெயபிரகாஷ், ரவி பிரகாசம், ஜெயந்த், கீதா பாபு, ரித்திகா, யுவினா மற்றும் பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய.. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். லாரன்ஸ் பாடலை எழுதியிருக்கிறார். குணசேகர் கலை இயக்கம் செய்கிறார். பிரேம் பூமிநாதன் எடிட்டிங் செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி. கதை, திரைக்கதை அஷ்ரப்-பிரபு யுவராஜ். வசனம் – பிரபு யுவராஜ்-லாரன்ஸ். அமீன், அக்பர் தயாரித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு யுவராஜ்.
2. 1 பந்து 4 ரன் 1 விக்கெட்
ரைசிங் சன் பிலிம் சார்பில் எச்.என்.கவுடா தயாரித்துள்ள படம் இது. இதில் வினய் கிருஷ்ணா, ஹாசிகா தத், ஸ்ரீமன், ஜீவா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து. இசை – உமேஷ்.
3. நாங்கெல்லாம் ஏடாகூடம்
குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜோர்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சார்லஸ் மெல்வின் இசையமைத்துள்ளார். விஜயகுமார் இயக்கியுள்ளார்.
4. 13-ம் பக்கம் பார்க்க
ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர். வினோத்குமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். புகழ்மணி இயக்கியுள்ளார்.
5. பகடை பகடை
வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிட் ஆகிய இரு பட நிறுவனங்களும் இணைத்து தயாரித்திருக்கின்றன.
இந்த படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். ரிச்சு என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் கோவை சரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை ஆகியோர் நடிதிருகிறார்கள்.
ஒளிப்பதிவு – Y.முரளி, இசை – ராம்ஜி – A.C. ஜான்பீட்டர், பாடல்கள் – தமிழமுதன், பால்முகில், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், வசனம் – வி.பிரபாகர், கலை – P.A.ஆனந்த், நடனம் – யாசின், ஸ்டண்ட் – டைகர்பாபு, எழுத்து-இயக்கம் – சசிசங்கர்.
6. அழகியபாண்டிபுரம்
புதுமுகங்களான இளங்கோ, அஞ்சனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தாய்மண் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். ந.ராயன் இயக்கியிருக்கிறார்.
7. மனம் கொண்ட காதல்
முத்துராம் ஹீரோவாகவும் நோபியா என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். விக்ரமன் வர்மன் இசையமைத்திருக்கிறார். ரித்திஷ், ஹரிஷ் மூவீஸ் தயாரித்திருக்கிறது. புகழேந்திராஜ் இயக்கியிருக்கிறார்.
8. அப்பா வேணாம்ப்பா
சாய்ஹரி கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட்ரமணன் தயாரித்து, இயக்கியிருக்கிறார். வி.கே.கண்ணன் இசையமைத்திருக்கிறார். குடியின் தீமையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படம் இது.
9. பிரசாத் (தெலுங்கு டப்பிங்)
10. எக்சோடஸ் (ஆங்கில டப்பிங்)
11. ஜோம்பி பெல்லி (ஆங்கில டப்பிங்)