FCS Creations சார்பில் துவார் சந்திரசேகர் தயாரித்த 3-வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’.. விஜய்யின் 50-வது படமான ‘சுறா’வை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்காரு. இவர் ஏற்கெனவே ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘கார்மேகம்’ ஆகிய படங்களை இயக்கியவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலுவுக்கு நிறைய படங்களில் காமெடி டிராக் எழுதி புகழ் பெற்றவர்..
ஹீரோவா பரதன் நடிச்சிருக்கார். கீத்திகா ஹீரோயினா நடிச்சிருக்காங்க. சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் இவங்களோட தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரும் ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார்.. வித்யாசாகரின் உதவியாளர் அருள்பதி இசையமைச்சிருக்காரு.. கதை, திரைக்கதை, வசனம் எழுதினதோட இல்லாமல், படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் எஸ்.பி.ராஜ்குமாரே எழுதி, இயக்கியிருக்காரு..
இசை வெளியீட்டு விழாவின் முன்பாக பாடல் காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.. கண்ணுக்கு இதமாகவும், காதுகளுக்கு இனிமையாகவும்தான் இருந்தன. இசையமைப்பாளர் அருள்பதிக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்க வேண்டும்.. திறமைக்காரர்தான்..
இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகருக்கு ரொம்பவே தில்லு அதிகம். ஹாலிவுட்டில் ஒரு தமிழ்ப் படம் எடுக்கணும்ன்றதுதான் அவரோட லட்சியமாம்.. அந்த லட்சியத்தை அடையத்தான் தமிழில் படங்களை தயாரித்து அனுபவம் பெறுகிறாராம்.. தமிழ்ப் பட தயாரிப்புகள் கற்றுக் கொடுக்காத பாடத்தை, ஹாலிவுட் கற்றுக் கொடுக்காது என்பது நிச்சயம்..!