‘பாக்க்ணும் போல இருக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “ஒரு படத்தின் வெற்றி, தோல்வியில் மீடியாக்களே பெரும் பங்கு வகிக்கின்றன. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘கோலிசோடா’ படத்தின் வெற்றியில் பத்திரிகையாளர்களுக்குத்தான் பெரும் பங்களிப்பு உண்டு. அவர்களுடைய பாராட்டுக்களால்தான் அப்படத்தின் மீது மிகப் பெரிய கவனம் ஏற்பட்டு, இப்போது படத்திற்கு நல்ல பிக்கப் கிடைத்திருக்கிறது. இதேபோல மற்ற அனைத்து படங்களுக்கும், பத்திரிகைகள் ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட வேண்டும்..” என்றார்..
எல்லாஞ்சரிதான் ஸார்.. ‘கோலிசோடா’ படத்துக்கு கூடவே வந்த ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படமும் நல்லாயிருந்துச்சுன்னு, பத்திரிகைக்காரங்க எழுதினாலும், தியேட்டருக்கு கூட்டம் வரலியே..?
பத்திரிகையாளர்கள் எழுதினால் மட்டும் போதாது.. படத்துலேயும் விஷயம் இருக்கணும்.. ரசிகர்களுக்குப் பிடித்ததுபோல் படம் இருக்கணும்.. இல்லாட்டி அந்தப் படம், விமர்சகர்களுக்கு மட்டுமே பிடிச்ச படமா போயிடும்..! நீங்களும் ‘கோலிசோடா’ மாதிரி நல்ல படமா எடுத்துக் குடுங்க.. நிச்சயம் அது தானா ஓடிரும்..!