full screen background image

‘தரத்தா மேளம்’ பற்றிய ஆல்பம்..!

‘தரத்தா மேளம்’ பற்றிய ஆல்பம்..!

என் பெயர் சுரேஷ். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான் வியாசர்பாடியில் வசிக்கிறேன். சென்னையைப் பற்றி நிறைய தெரிந்த எனக்கு நண்பர்கள்தான் எல்லாம்.

சின்ன வயதிலிருந்தே சாவு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்த எனக்கு என் நண்பர்கள் கோவலன், ராமு, உதயா, கருணா, கிஷோர் இவர்களின் மூலம் சினிமா துறையில் டான்ஸ் ஆட அறிமுகம் கிடைத்து, உள்ளே நுழைந்துவிட்டேன்.

டான்ஸ் மாஸ்டர் அம்மா ராஜசேகர் மூலம் நிறைய ஹீரோக்களிடமும் சேர்ந்து ஆட வாய்ப்பு கிடைத்தது. டான்ஸ் மாஸ்டர்கள் பிரபுதேவா, நான் பெருமையாக கருதும் எங்கள் வட சென்னையைச் சேர்ந்த லாரன்ஸ் இவர்களிடம் உதவி நடன கலைஞராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருப்பது போலவே சென்னைக்கும் ‘ராஜமேளம்’ என்ற சிறப்பு உண்டு. இதை ‘சட்டி மேளம்’ என்று சொல்லுவார்கள்.

எந்த இசைக் கருவியை எடுத்துக்கிட்டாலும் ச,ரி,க,ம, ப,த,நி,ச, என ஒரு வாய்பாடு இருக்கும். ஆனால் சட்டிமேளத்தை அடித்தால் ‘தரத்தா தரதர’ன்னு உள்ளுக்குள் ஒரு உணர்வை உண்டாக்கும். இதை மையமாக வைத்து ‘தரத்தா சென்னை லோக்கல் குத்து’ என்று ஒரு ஆல்பம் பண்ணியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ‘தரத்தா மேளம்’ மெல்ல மெல்ல மறக்கப்படுகிறது. சென்னையைத் தவிர வேறு எந்த ஊரிலும் தெரியவில்லை. ஆனால் அது ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் மிக முக்கியமான பிரபலமான ஒரு கலையாக மதிக்கப்படுகிறது. ‘தரத்தா மேளம்’ வருங்காலத்தில் மறைந்துவிடக் கூடாது என்பதால் சென்னை மக்களை இதில் ஆட வைத்திருக்கிறேன்.

சினிமாவில் மேலே வரும் முயற்சியாகத்தான் இந்த தரத்தா ஆல்பத்தை நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செய்திருக்கிறோம். இந்த ஆல்பத்தின் மூலம் என்னுடன் பணியாற்றுயவர்களுக்கும் எங்களை போன்றோர்க்கும் திரைத்துறையில் நடனடமாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இதைப் படித்தவர்களுக்கும், எங்களுக்கு உதவி செய்ய நினைத்தவர்களுக்கும் எங்கள் தரத்தா தளத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Our Score