இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து உருவான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம் பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து,
இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான Dr. சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார்.
இந்தப் பாடலை Divo Warner South நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட sensational star “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல் கல் படைப்பாக இந்த “தென்றலில்” பாடல் உருவாகியுள்ளது.
தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது.
சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை.
என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன்), Chillax (வேலாயுதம்), தீயே தீயே (மாற்றான்), கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் (திருமணம் இன்னும் நிக்காஹ்), sada nannu (keerthy suresh Mahanati), அஞ்சு வண்ண பூவே(AR Rahman, Thug Life) போன்ற superhit film songs பாடியவர் சாருலதா.
இவர் ஆஸ்திரேலியாவில் Griffith University-யில் இசையில் PhD & Postdoctoral Fellowship முடித்துள்ளார்.
இசை அமைப்பாளராக இவரின் புதிய அவதாரம் வரவேற்கத்தக்கது.
இந்தப் பாடல் அனைத்து digital streaming platforms-ல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு அருமையான music video YouTube – ல் release ஆகி உள்ளது.
இந்த பாடலில் புதுமுகங்களான மாளவிகா & தவன் நடிக்க தரன் கார்த்திக் இயக்கியுள்ளார்.
வெளியீட்டு விவரங்கள்:
பாடல்: தென்றலில்
இசையமைப்பு, பாடலாசிரியர் & பாடகி: Dr சாருலதா மணி
வெளியீட்டுத் தேதி: ஏப்ரல் 30, 2026
Label: டிவோ (Divo) / வார்னர் மியூசிக் சவுத் (Warner Music South)
பத்திரிக்கை தொடர்பு: நிகில் முருகன்.
CHENNAI, 30 April 2026
“Makkal Selvan” Vijay Sethupathi Launches “Thendralil” A Soulful New Indie by Charulatha Mani from Loopd by Divo, Warner Music South.
Fresh off the massive pan-Indian success of the hit track “Anju Vanna Poove” from the AR Rahman musical “Thug Life”, acclaimed Indian playback singer Dr Charulatha Mani is set to captivate audiences once again with her latest independent single, “Thendralil.”
Showcasing his continuous support for independent music and artists, the versatile “Makkal Selvan” Vijay Sethupathi has officially launched the track.
“Thendralil” is a special milestone project that features Charulatha Mani taking on the triple role of Composer, Singer, and Lyricist. Known for her pristine vocals and ability to bridge classical and contemporary styles, her latest composition promises to be a romantic melody-driven experience for music lovers. Centred around the ocean, beaches and sands evolves a deeply passionate love story. Charulatha has a PhD in music from Queensland Conservatorium Griffith University, Australia and a Postdoctoral Fellowship in Music with University of Queensland. She has performed and composed with prestigious ensembles and showcased at Carnegie Hall, New York. An acclaimed Karnatik classical singer and raaga expert, her other notable film hits include “En Uchi Mandaila” (Vettaikaran), “Chillax” (Velayudham), “Kannukul Pothivaipen” (Thirunamam enum nikkah), “Theeye Theeye” (Maatraan), “Titli” (Shahrukh-Deepika starrer Chennai Express), “Anju Vanna Poove” (Thug Life).
The song “Thendralil” is available on all streaming platforms. A compelling music video has been launched with lead actors Maalavika and Dhavan directed by Dharen Karthik, with special appearances by Charulatha Mani making this a memorable composer debut for her. She has used instruments such as Sarangi, Acoustic Guitars, Piano, Pakhawaj, Bass Guitar, Synths and Thavil in her production to give a modern and expressive touch to the love song.
Release Details:
Track: Thendralil
Artist, Composer Lyricist & Singer: Dr Charulatha Mani
Official Release Date: April 30, 2026
Label/Digital Partner: Divo / Warner Music South
PR: Nikil Murukan









