full screen background image

‘தாயம்’ படத்திற்காக ‘தாயம்’ உருட்டிய இசையமைப்பாளர்..!

‘தாயம்’ படத்திற்காக ‘தாயம்’ உருட்டிய இசையமைப்பாளர்..!

ஒரே அறையில் படமாக்கப்பட்டுள்ள படம் என்கிற பார்வையில் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள  ‘தாயம்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

thaayam movie stills

அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த ‘தாயம்’ படத்தை ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார். திரு இணை தயாரிப்பு செய்திருக்கும் இந்த ‘தாயம்’ படத்திற்கு, பல குறும்படங்களுக்கு இசையமைத்த அறிமுக இசையமைப்பாளர்  சதீஷ் செல்வம் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இசையமைத்துள்ளது பற்றி பேசிய சதீஷ் செல்வம், “இந்தத் ‘தாயம்’ படம் முழுவதும் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருப்பதால், அதற்கு இசை அமைப்பது என்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் படத்தின் திரைக்கதை மாறிக் கொண்டேயிருக்கும் என்பதால்  பின்னணி இசையில் அதிக கவனம் தேவைப்பட்டது. இசை என்பதையும் தாண்டி படத்தோடு பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே பின்னணி இசை இருக்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன்.

thaayam-stills-22

ஒரு தாயக் கட்டையில் இருக்கும் நான்கு பக்கங்களை போல ‘தாயம்’ படத்தில் இருக்கும் நான்கு பாடல்களும் கதையை மென்மேலும் வலுப்படுத்தும். ‘தாயம்’ படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி மற்றும் ரீரிக்கார்டிங் பணிகளெல்லாம் மாசிடோனியா நாட்டிலும், பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற FAMES ஸ்டுடியோவிலும், பிரம்மாண்ட இசை குழுவினருடன்  நடைபெற்றது. இந்த ஸ்டுடியோவில்தான் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் ரீரிக்கார்டிங் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதைவிட பெருமை  என்ன இருக்கிறது..?

இப்படிப்பட்ட அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த, என்னுடைய தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் திரு ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

‘தாயம்’ திரைப்படத்தை காண வரும் ரசிகர்களின் மனதில், படம் முடிந்த பின்பும், பின்னணி இசையின் தாக்கம் நீடித்து கொண்டே இருக்கும்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம்.

Our Score