தமிழ்த் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களது படம் வெற்றி என்று போஸ்டர் அடிக்கிறார்கள். விளம்பரம் செய்கிறார்கள். பரப்புரை செய்கிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது.. எத்தனை கோடி லாபம் என்கிற உண்மையான புள்ளிவிபரக் கணக்கை சொல்வதேயில்லை. அவர்கள் வெளிப்படையாகச் சொன்னால் மட்டுமே உண்மையான நிலவரம் நமக்குக் கிடைக்கும். இல்லாதபட்சத்தில் தோரயமாக மட்டுமே நாம் வெற்றிப் படங்களை பட்டியலிட முடியும்..!
ஆகவே தயாரிப்பாளர்கள் குழுமம், விநியோகஸ்தர்கள் குழுமம், தியேட்டர்காரர்கள், மீடியாக்கள் என்று பல வழிகளிலும் விசாரித்தவகையில் சென்ற ஆண்டு வெளிவந்த 209 தமிழ்த் திரைப்படங்களில் வெற்றி பெற்று, படத்தின் செலவுக்கும் மேலாக லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்த படங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.
1. தெறி
2. கபாலி
3. பிச்சைக்காரன்
4. ரஜினி முருகன்
5. ரெமோ
6. 24
7. இருமுகன்
8. அரண்மனை-2
9. இறுதிச் சுற்று
10. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
11. தர்மதுரை
12. அப்பா
13. சென்னை-28-2
14. சேதுபதி
15. விசாரணை
16. கிடாரி
17. கொடி
18. காஷ்மோரா
19. தேவி
20. திருநாள்
21. தில்லுக்கு துட்டு